Centre for Evidence-Based Physiotherapy (CEBP), பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட ஒரு சிறிய குழுவால் 1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இப்போது இது, சிட்னி பல்கலைக்கழத்தில் உள்ள ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்-ன் மஸ்குலோஸ்கெலிட்டல் ஹெல்த்-ஐ அடிப்படையாக கொண்டுள்ளது.
CEBP-ன் பணி, கிடைக்கும் சிறந்த ஆதாரத்தை மருத்துவ பயன்பாட்டுக்கு வழிவகுப்பதன் மூலம் பிசியோதெரபி சேவைகளின் செயல்திறனை அதிகரிப்பதாக உள்ளது. CEBP, “பயனுள்ள பிசியோதெரபியானது, மக்கள் சார்ந்தது, தடுப்பு நோக்குடையது, பாதுகாப்பானது மற்றும் தொழில்நுட்ப திறமை வாய்ந்தது, சிறந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்தது, மற்றும் திறமையாக நிர்வகிக்கப்படுவது” என்று நம்புகிறது.
CEBP, பிசியோதெரபி ஆராய்ச்சியை எளிதாக்கவும் மற்றும் பயனுள்ள பிசியோதெரபியை செயல்படுத்தவும் ஒரு இலாப-நோக்கற்ற அமைப்பாக செயல்படுகிறது, இவற்றின் ஆலோசனையோடு:
- தொழில்முறை நிறுவனங்கள் (World Confederation for Physical Therapy-ன் உறுப்பினர் அமைப்புக்கள் உட்பட)
- பிசியோதெரபி சேவைகளை வாங்கியவர்கள் (மூன்றாம் நபர் மற்றும் பணியாளரின் இழப்பீடு சீரமைக்கும் அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், மற்றும் ஆரோக்கிய நிதிகள் உட்பட)
- பிசியோதெரபி வழங்குநர்கள் (பிசியோதெரபி துறைகள், பகுதி ஆரோக்கிய அதிகார அமைப்புகள் மற்றும் தனியார் பயிற்சியாளர்கள் உட்பட)
- பிசியோதெரபி பதிவு மற்றும் உரிமம் அதிகாரிகள்
- பிசியோதெரபி படிப்பு திட்டங்கள்
- நுகர்வோர்களின் நலன்களை பிரதிநித்துவம் செய்யும் குழுக்கள்.
CEBP-யுடைய கொடியுரிமை, Physiotherapy Evidence Database (PEDro).