மருத்துவ சோதனைகளுக்கான சேர்க்கை திட்ட அளவைகள்
மருத்துவ சோதனைகளில், PEDro-வில் சேர்ப்பதற்கான தகுதியுடையவைகள் மற்றும் அவ்வாறு இல்லாதவைகளை வேறுபடுத்தி அறிய கீழ்க்கண்ட திட்ட அளவைகள் பயன்படுத்தப்படுகின்றன:
- ஒரு சோதனை குறைந்தது இரண்டு தலையீடுகளின் ஒப்பீட்டை உள்ளடக்கியதாக வேண்டும். இந்த தலையீடுகளில் ஒன்று, சிகிச்சையின்மை கட்டுப்பாடு, அல்லது ஒரு போலி சிகிச்சையைக் கொண்டதாக இருக்க முடியும். மாற்றாக, மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தலையீடுகளில், எது சிறந்தது என்று நிர்ணயிக்கும் நோக்கத்துடன் ஒப்பீடு செய்யப்படுவதாக இருக்கலாம். ஒவ்வொரு நபரும் ஒன்றுக்கும் மேற்பட்ட தலையீடுகளுக்கு உள்ளாகின்ற குறுக்கு பாய்வு சோதனைகள், பிற திட்ட அளவைகள் சந்திக்கப்படும் பட்சத்தில் PEDro-வில் சேர்க்கப்படும். நபர்கள், குழுக்களாக தலையீடுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் திரள் சோதனைகள், பிற திட்ட அளவைகள் சந்திக்கப்படும் பட்சத்தில் PEDro-வில் சேர்க்கப்படும். தலையீடுகளில் (ஆனால், வரம்பு இல்லாமல்), சிகிச்சைகள், தடுப்பு உத்திகள், நோய் கண்டறியும் பரிசோதனைகள் அல்லது உத்திகள் அல்லது மேலாண்மை அல்லது கல்வி உத்திகள் ஆகியவற்றை உள்ளடக்கக் கூடும்.
- மதிப்பிடப்படும் தலையீடுகளில் குறைந்தது ஒன்றாவது, தற்போது ஒரு பிசியோதெரபி நடைமுறை பயிற்சியாகவோ அல்லது பிசியோதெரபி நடைமுறை பயிற்சியின் ஒரு பகுதியாக இருக்க முடிய கூடியதாக இருக்க வேண்டும். இருப்பினும், பிசியோதெரபிஸ்ட்களால் ஆய்வு மேற்கொள்ள பட வேண்டியதில்லை. அதேபோல், சோதனையில், தலையீடுகள் ஒரு பிசியோதெரபிஸ்ட்டால் மேற்கொள்ளப்பட வேண்டியதில்லை.
- பிசியோதெரபி நடைமுறை பயிற்சியில் நிச்சயமாக பயன்படுத்த வேண்டிய பிரதிநிதிகளாக இருக்கக் கூடிய நபர்களுக்கு (அல்லது பிரதிநிதியாக இருக்க நோக்கம் கொண்டவர்களாய்) தலையீடுகள் அளிக்கப்படவேண்டும். ஒரு ஆரோக்கிய நிலைமை அல்லது ஊனம் கொண்ட மக்களுக்கு தலையீடு (ஒரு சிகிச்சை விஷயத்தில்) அல்லது ஒரு ஆரோக்கிய நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் கொண்ட அல்லது ஊனம் கொண்ட மக்களுக்கு தலையீடு (ஒரு தடுப்பு உத்தி விஷயத்தில்) அளிக்கப்படவேண்டும் என்று பொதுவாக பொருள்படும். மனிதர்களை தவிர விலங்குகள் மீது நிகழ்த்தப்படும் விசாரணைகளை PEDro-வில் காப்பகப்படுத்தப்பட மாட்டாது.
- தலையீடுகளுக்கு, சீரற்ற ஒதுக்கீடு அல்லது சீரற்ற-நோக்கம் கொண்ட ஒதுக்கீடு மூலம் மக்களை ஒதுக்கீடு செய்வதை உள்ளடக்கியதாக சோதனை இருக்க வேண்டும். சீரற்ற-நோக்கம் கொண்ட ஒதுக்கீடு மூலம், நாங்கள், மாறி மாறி ஒதுக்கப்படும் ஒதுக்கீட்டு முறைகளை, (எ.கா, “மருந்தகத்திற்கு வந்து ஒவ்வொரு இரண்டாவது நோயாளியும் சிகிச்சை குழுவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர்”) போன்றவற்றையும், அல்லது ஒற்றை மற்றும் இரட்டை படை பிறந்த தேதிகள், அல்லது மருத்துவமனை பதிவு எண்கள் மூலம் மாறி மாறி ஒதுக்கீடு செய்யப்படும் ஒதுக்கீடு முறைகளை குறிக்கிறது. PEDro-வில் சேர்க்கப்படுவதற்கு, நிச்சயமாக, சீரற்ற ஒதுக்கீடு அல்லது சீரற்ற-நோக்கம் கொண்ட ஒதுக்கீட்டை ஒரு ஆய்வு பயன்படுத்தி இருக்க வேண்டும் (அதாவது, இந்த ஒதுக்கீட்டு முறைகளில் ஏதேனும் ஒன்று பயன்படுத்தப்பட்டிருகிறது என்பது தெளிவாய் இல்லையென்றால், அந்த ஆய்வு சேர்க்கப்பட கூடாது).
- ஆய்வு அறிக்கையானது ஒரு சரியிணை-ஒப்பான திறனாய்வு பத்திரிக்கையில் ஒரு முழு உரை ஆய்வு அறிக்கையாக (சுருக்கவுரை அல்ல) இருத்தல் வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட செயல் முறைகளின் தரம் அல்லது ஆசிரியர்கள் தாங்கள் செய்யப் போவதாக கூறியதை உண்மையில் செய்தனரா என்பதானவற்றின் தீர்ப்புகள், PEDro-வில் ஒரு மருத்துவ சோதனையை சேர்ப்பதற்கு தகுதியாக முடிவு செய்ய பயன்படுத்த முடியாது.
முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகளை சேர்ப்பதற்கான சேர்க்கை திட்ட அளவைகள்
பிசியோதெரபி தலையீடுகளை மதிப்பிட்ட முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகளும் PEDro-வில் காப்பகப்படுத்தப்படுகின்றன. முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள், (சொற்தொகுதி முரண்பட்டு வழங்கப்பட்டாலும், சில நேரங்களில், மெட்டா- பகுப்பாய்வுகள் என்று அழைக்கப்படுகிறது) சார்பு நிலையை குறைப்பதற்கான செயல்முறைகளைக் கொண்டிருப்பதன் மூலம், பாரம்பரிய (“விளக்க “) திறனாய்வுகளில் இருந்து வேறுபடுகின்றன. PEDro-வில் சேர்ப்பதற்கான தகுதியுடையவைகள் மற்றும் அவ்வாறு இல்லாதவைகள் என்று முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகளை வேறுபடுத்தி அறிய கீழ்க்கண்ட திட்ட அளவைகள் பயன்படுத்தப்படுகின்றன:
- திறனாய்வு, தேடல் உத்தியை மற்றும் சேர்க்கை திட்ட அளவைகளை விவரிக்கும் ஒரு செயல் முறை பகுதியை கொண்டிருக்க வேண்டும்.
- திறனாய்வில், PEDro-வில் சேர்ப்பதற்கான திட்ட அளவைகளை திருப்திபடுத்துகிற குறைந்தபட்சம் ஒரு சோதனை, திறனாய்வு அல்லது வழிகாட்டல் (அல்லது வெளிப்படையாக தேடியும், ஆனால் ஒரு சோதனை, ஆய்வு அல்லது வழிகாட்டு கண்டுபிடிக்க முடியாமல் போவது) சேர்க்கப்பட வேண்டும்.
- ஆய்வு அறிக்கையானது ஒரு சரியிணை-ஒப்பான திறனாய்வு பத்திரிக்கையில் ஒரு முழு உரை ஆய்வு அறிக்கையாக (சுருக்கவுரை அல்ல) இருத்தல் வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட செயல் முறைகளின் தரம் அல்லது ஆசிரியர்கள் தாங்கள் செய்யப் போவதாக கூறியதை உண்மையில் செய்தனரா என்பதானவற்றின் தீர்ப்புகள், PEDro-வில் ஒரு முறைப்படுத்தப்பட்ட திறனாய்வை சேர்ப்பதற்கு தகுதியாக முடிவு செய்ய பயன்படுத்த முடியாது.
ஆதாரம்-சார்ந்த மருத்துவ நடைமுறை வழிகாட்டல்களை சேர்ப்பதற்கான சேர்க்கை திட்ட அளவைகள்
கீழ்க்கண்ட சேர்க்கை திட்ட அளவைகளை திருப்தி செய்கிற ஆதாரம்-சார்ந்த மருத்துவ நடைமுறை வழிகாட்டல்கள் சேர்க்கப்படும்:
- ஒரு ஆரோக்கிய வல்லுனர் சங்கம் அல்லது சமூகம், பொது அல்லது தனியார் அமைப்பு, ஆரோக்கிய பராமரிப்பு அமைப்பு அல்லது திட்டம் அல்லது அரசு நிறுவனம் ஆதரவின் கீழ் ஒரு மருத்துவ நடைமுறை வழிகாட்டல் தயாரிக்கப்படுகிறது. மேற்கூறிய அமைப்புகள் ஏதேனும் ஒன்றால் அதிகாரபூர்வமாக வழங்கப்படாமல் அல்லது ஆதரவளிக்கப்படாத ஒரு தனிநபர் அல்லது குழு மூலம் தயாரிக்கப்பட்டு மற்றும் வெளியிடப்படும் ஒரு மருத்துவ நடைமுறை வழிகாட்டல் PEDro-விற்கான சேர்க்கை திட்ட அளவைகளை சந்திப்பதில்லை.
- மருத்துவ நடைமுறை வழிகாட்டல் பொதுவில் கிடைக்கிறது.
- ஒரு முறைப்படுத்தப்பட்ட இலக்கிய தேடல் மற்றும் சரியிணை-ஒப்பானவர் திறனாய்வு பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட அறிவியல் ஆதாரத்தை திறனாய்வு செய்தல் ஆகியவை ஒரு வழிகாட்டல் தயாரிப்பின் போது செய்யப்படும் அல்லது வழிகாட்டல்கள் வெளியீட்டிற்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஒரு முறைப்படுத்தப்பட்ட திறனாய்வை அடிப்படையாக கொண்டிருந்தன.
- முறைப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட சொற்தொடர்களை கொண்ட பரிந்துரைகளை, உத்திகள், அல்லது தகுதியான ஆரோக்கிய பராமரிப்பு பற்றிய முடிவுகள் எடுக்க வழிக்காட்டும் தகவல் ஆகியவற்றை மருத்துவ நடைமுறை வழிகாட்டல் கொண்டிருக்கும்.
- தற்போது ஒரு பிசியோதெரபி நடைமுறை பயிற்சியாகவோ அல்லது பிசியோதெரபி நடைமுறை பயிற்சி ஆக முடிய கூடியதான ஒரு தலையீட்டின் மேலாவது, ஏதாவது ஒரு பரிந்துரையாவது அக்கறைக் கொண்டிருக்க வேண்டும்.
- பிசியோதெரபி பரிந்துரைகள் குறைந்தது ஒரு சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனை அல்லது பிசியோதெரபி தொடர்பான முறைப்படுத்தப்பட்ட திறனாய்வை அடிப்படையாக கொண்டவை ஆகும்.
பயன்படுத்தப்பட்ட செயல் முறைகளின் தரம் அல்லது ஆசிரியர்கள் தாங்கள் செய்யப் போவதாக கூறியதை உண்மையில் செய்தனரா என்பதானவற்றின் தீர்ப்புகள், PEDro-வில் ஒரு மருத்துவ நடைமுறை வழிகாட்டலை சேர்ப்பதற்கு தகுதியாக முடிவு செய்ய பயன்படுத்த முடியாது.