PEDro மேற்கோள் மென்பொருளி-ற்கான வடிகலங்கள்

PEDro மேற்கோள் மென்பொருளிற்கு இரண்டு வடிகலங்கள் உள்ள:

  1. EndNote வடிக்கலம்
  2. RefWorks வடிக்கலம்

1. EndNote வடிக்கலம்

PEDroவிலிருந்து சேமிக்கப்பட்ட தேடல் முடிவுகளை RIS கோப்பாக (ஆராய்ச்சி தகவல் அமைப்புகள் உருவாக்கிய ஒரு தரப்படுத்தப்பட்ட தொங்கல் வடிவ கோப்பு) EndNote-ல் இறக்குமதி செய்யலாம். இந்த அமைப்பு, PEDro EndNote வடிக்கலத்தை செப்டம்பர் 2011-ல் மாற்றி ஈடு செய்தது.

PEDro தேடல் முடிவுகளை EndNote-ற்குஇறக்குமதி செய்வதற்கான வழிமுறைகள்

  1. ஒரு PEDro தேடுதலை மேற்கொள்ளவும்
  2. தொடர்புடைய ஆவணங்களை தேர்ந்தெடுக்கவும்
  3. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களை காட்டவும்
  4. தேர்ந்தெடுத்த தேடல் முடிவுகளை உங்களுக்கே மின்னஞ்சல் அனுப்பவும்
  5. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களை இவ்வாறாக சேமிக்கலாம்:
    A. “Save results” இணைப்பை க்ளிக் செய்து, ஒரு RIS கோப்பை உங்கள் கணினியில் சேமியுங்கள்
    B. தேர்ந்தெடுத்த தேடல் முடிவுகளை உங்களுக்கே மின்னஞ்சல் அனுப்பவும் மற்றும் மின்னஞ்சல் செய்தியை ஒரு உரை கோப்பாக சேமிக்கவும் (மேக் பயனர்களுக்கு மின்னஞ்சல் செய்தியை மைக்ரோசாப்ட் வேர்டில் நகலெடுத்து ஒட்டி, கோப்பு மாற்றும் பெட்டியில், “வரி தடுப்பான்கள் புகுத்துக”-வை பயன்படுத்தி சாதாரண உரை கோப்பாக சேமிக்கவும்)
  6. சேமிக்கப்பட்ட உரை கோப்பை, EndNote-ல் உள்ள “Reference Manager (RIS)” இறக்குமதி விருப்பத்தை பயன்படுத்தி EndNote-ல் இறக்குமதி செய்யவும்

எவ்வாறு ஆவணங்களை தேர்ந்தெடுக்கலாம், ஆவணங்களை சேமிக்கலாம், மற்றும் சேமிக்கப்பட்ட ஆவணங்களை EndNote-ல் இறக்குமதி செய்யலாம் என்பதை இந்த தனிமுறை காணொளி பயிற்சி விளக்கி காட்டுகிறது.

2. RefWorks வடிக்கலம்

PEDro தரவுத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணங்களை RefWorks நூலகத்திற்கு இறக்குமதி செய்வதற்கு PEDro RefWorks வடிக்கலத்தை பயன்படுத்தலாம்.

PEDro தேடல் முடிவுகளை RefWorks-ல் இறக்குமதி செய்வதற்கான வழிமுறைகள்

  1. ஒரு PEDro தேடுதலை மேற்கொள்ளவும்
  2. தொடர்புடைய ஆவணங்களை தேர்ந்தெடுக்கவும்
  3. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களை காட்டவும்
  4. திரையில் காட்டப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களை நகலெடுக்கவும்
  5. RefWorks web-site-ல் உள் நுழைக
  6. “References” விருப்பப்பட்டியலில் “Import” விருப்பத்தை தேர்வு செய்க
  7. “Import Filter/Data Source” பெட்டியில் PEDro-வை தேர்வு செய்க
  8. உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களை “Import Data from the following Text” பெட்டியில் ஒட்டுக
  9. உங்கள் தேடல் முடிவுகளை “Import”-ஐ அழுத்தி இறக்குமதி செய்க

புதிய செய்திகளை அறிந்து கொள்ள, PEDro செய்திமடலுக்கு பதிவு செய்யுங்கள்