தனிமுறைப் பயிற்சிகள்

ஆதாரம்-சார்ந்த நடைமுறை சிகிச்சைக்கான திறன்களை, PEDro-வின் தனிமுறைப் பயிற்சிகள் மூலம் நீங்கள் மேம்படுத்திக் கொள்ளலாம்:

  1. ஒரு மருத்துவ ரீதியான கேள்வியை எவ்வாறு கேட்க வேண்டும்
  2. சோதனை முறையானதா?
  3. சிகிச்சை மருத்துவரீதியாக பயன்மிக்கதாக இருக்கிறதா?

1. ஒரு மருத்துவ ரீதியான கேள்வியை எவ்வாறு கேட்க வேண்டும்

நீங்கள் மருத்துவ ஆராய்ச்சியை தேடத் தொடங்கும் முன், நீங்கள் பதிலளிக்க வேண்டிய கேள்வியை பற்றி நினைக்க சில நேரம் செலவு செய்வது சிறந்ததாகும். உங்கள் கேள்வியை உருவாக்கி மற்றும் தெளிவு செய்வதன் மூலம், அதற்கு பதிலளிக்க ஆராய்ச்சியை கண்டுபிடிப்பது எளிதாகுகிறது. இந்த தனிமுறை காணொளி பயிற்சி, மருத்துவ கேள்விகளை PICO (Patient-Intervention-Comparison-Outcome) வடிவமைப்பில் எவ்வாறு கேட்பது என்பதை விவரிக்கிறது.

2. சோதனை முறையானதா?

குறைந்த-ஆற்றல் லேசர் லேட்ரல் எபிகாண்டிலிடிஸுக்கான ஒரு பயனுள்ள சிகிச்சையா? பக்கவாதம் தொடர்பான தசைக் குறுகலின் வளர்ச்சியை தசை நீட்டல் திட்டங்கள் தடுக்குமா? ஃபிளட்டர் வால்வு பயன்படுத்துவது அறுவை சிகிச்சைக்குப் பின்னான சுவாச சிக்கல்களைக் குறைக்குமா? இந்த கேள்விகளுக்கான தீவிர பதில்களை ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட, முறையாக செயல்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மூலம் மட்டுமே வழங்கப்படும். துரதிருஷ்டவசமாக, செல்லுபடியாகும் முடிவுகளை வரையும் சிறப்பாக நடத்திய சோதனைகள், மற்றும் தவறான முடிவுகளை வரையும் மோசமாக நடத்தப்பட்ட சோதனைகளையும் இலக்கியம் கொண்டிருக்கிறது. ஒரு வாசகர் இவ்விரண்டையும் வேறுப்படுத்தி அறிய தெரிந்திருக்க வேண்டும். இந்த தனிமுறை பயிற்சி, மருத்துவ பரிசோதனைகளின் (அல்லது “செயல் முறையியல் வடிக்கலங்கள்”) செல்லுபடியாக வேண்டிய முக்கிய அம்சங்களை விவரிக்கிறது.

பிசியோதெரபி சிகிச்சைகளின் திறனை தீர்மானிக்க எத்தனிக்கும் சில ஆய்வுகள் வெறுமனே, ஒரு குறிப்பிட்ட நிலை கொண்ட ஒரு மக்கள் குழுவை வரிசைப்படுத்தி சிகிச்சைக்கும் முன்னும் பின்னும் நிலைமையின் தீவிர அளவுகளை மதிப்பிடும். சிகிச்சைக் காலத்தில் ஆய்வு மக்கள் முன்னேற்றம் அடைந்தனர் என்றால், அந்த சிகிச்சை பயனுள்ளது என்று கூறப்படும். இத்தகைய முறைகளை பயன்படுத்தும் ஆய்வுகள், சிகிச்சை திறன் பற்றிய திருப்திகரமாக ஆதாரங்களை மிக அரிதாகவே வழங்கும், ஏனெனில், காணப்பட்ட முன்னேற்றங்கள் சிகிச்சையினால் ஏற்பட்டவை என்றோ மற்றும் இயற்கை மீட்சி, புள்ளிவிவர பின்னடைவு (நாட்கள் செல்ல, வெறுமனே தங்கள் நிலையில் ஏற்படும் மாறுபாட்டினால், மக்கள் மிக குறைவான “தீவிரம்” அடைவர் என்பதான ஒரு புள்ளிவிவர நிகழ்வு), போலி சிகிச்சை விளைவுகள், அல்லது”ஹாதோர்ன்”விளைவு (ஆராய்ச்சியாளர் முன்னேற்றங்களை கேட்க விரும்புவார் என்று ஆய்வு மக்கள் முன்னேற்றங்களை அறிக்கையிடுதல்) ஆகிய புறம்பான வேறுபாட்டு காரணிகளால் அல்ல என்பது மிகவும் அரிதாகவே சாத்தியம். ஒரு ஆய்வின் செல்லுபடித் தன்மையின் மீதான இத்தகைய அச்சுறுத்தல்களை சமாளிக்க ஒரு கட்டுப்பாட்டு குழு கொண்டிருப்பது மட்டுமே திருப்திகரமான வழியாகும். பின்னர், சிகிச்சை பெற்ற மக்களுக்கும் மற்றும் சிகிச்சை பெறாத மக்களுக்கும் இடையே விளைவுகளை ஒப்பீடு செய்ய வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளின் தர்க்கம், புறம்பான வேறுபாட்டு காரணிகள் சராசரியாக, சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு குழுக்கள் மீது ஒரே அளவில் செயல்பட வேண்டும், ஆதலால் சோதனையின் முடிவில் குழுக்கள் இடையே எந்த வித்தியாசமும் சிகிச்சையின் காரணமாக இருக்க வேண்டும் என்பதாகும். ஒரு எடுத்துக்காட்டாக, பெரும்பாலான கடுமையான கீழ்முதுகுவலி நிலைகள், எந்த சிகிச்சையும் இல்லாத நிலையிலும் கூட, தன்னிச்சையாக மற்றும் வேகமாக சரியாகும் என்று அறியப்படுகிறது. ஆதலால், ஆய்வு மக்கள் ஒரு கால அளவு சிகிச்சையின் போது மேம்பட்டனர் என்று காட்டுவது சிகிச்சையின் திறனுக்குரிய ஆதாரம் ஆகாது. சிகிச்சையளிக்கப்பட்ட மக்கள், கட்டுப்பாட்டு மக்களை காட்டிலும் முன்னேறினர் என்பது ஒரு வலுவான ஆதாரம் ஆகும், ஏனெனில், இயற்கை மீட்சி, சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு குழுக்கள் இரண்டிலும் ஏற்பட்டிருக்க வேண்டும். சிகிச்சை அளிக்கப்பட்ட ஆய்வு மக்கள், கட்டுப்பாட்டு ஆய்வு மக்களை விட முன்னேறினர் என்ற கண்காணிப்பு, இயற்கை மீட்சியை விட எதோ ஒன்று முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வில், “கட்டுப்பாடு” குழு எந்த சிகிச்சையும் பெற வேண்டியதில்லை என்பதை அறியவும். பெரும்பாலும், கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளில், வழக்கமான சிகிச்சை பெறும் ஒரு கட்டுப்பாட்டு குழுவிற்கும் மற்றும் வழக்கமான சிகிச்சையோடு சிகிச்சை பெறும் ஒரு சோதனை குழுவிற்கும் இடையே ஒப்பீடு உள்ளது. மாற்றாக, சில சோதனைகள் ஒரு புதிய சிகிச்சை பெறுகின்ற ஓர் சோதனை குழுவோடு வழக்கமான சிகிச்சை பெறும் ஒரு கட்டுப்பாட்டு குழுவை ஒப்பிடும்.

முக்கியமாக, கட்டுப்பாட்டு மற்றும் சிகிச்சை குழுக்கள் ஒரே போல இருக்கும் வரை, கட்டுப்பாட்டு குழுக்கள் புறம்பான வேறுபாட்டு காரணிகளின் கலப்பு விளைவுகளுக்கு எதிராக பாதுகாப்பு வழங்கும். சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு குழுக்கள் ஒவ்வொரு வகையிலும் ஒரே மாதிரியாக இருந்து விளைவுகளை தீர்மானிக்கும் பட்சத்தில் மட்டுமே (அவர்கள் சிகிச்சை பெற்றனரா அல்லது இல்லையா என்பதை தவிர) சோதனையின் முடிவில் குழுக்கள் இடையேயான வேறுபாடுகள் சிகிச்சை காரணமாக இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சியாளர் உறுதிப்படுத்த முடியும். இதனை நடைமுறையில், கிடைக்கப் பெறும் ஒரு குழு மக்களை சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு குழுக்களுக்கு சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்வதன் மூலம் அடையலாம். இது, இயற்கை மீட்சி போன்ற புறம்பான வேறுபாட்டு காரணிகள், சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு குழுக்கள் மீது ஒரே அளவு விளைவை கொண்டிருக்கும் என்பதை உறுதி செய்யும். உண்மையில், சீரற்ற முறையில் குழுக்களுக்கு ஒதுக்கீடு செய்யும் போது, சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு குழுக்கள் இடையேயான வேறுபாடுகள் சிகிச்சை அல்லது வாய்ப்பினால் மட்டுமே இருக்க முடியும், மற்றும் வேறுபாடுகள் போதுமான அளவு பெரிதாக இருந்தால், வாய்ப்பினை விலக்குவது சாத்தியமாகிறது- இதை புள்ளியல் சோதனைகள் செய்யும். சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு குழுக்களை ஒப்பீட்டலை உறுதி செய்ய இதுவே ஒரே வழி என்பதை அறியவும். சீரற்ற ஒதுக்கீட்டிற்கு எந்த ஒரு உண்மையான திருப்திகரமான மாற்றீடும் இல்லை.

ஆய்வுக்குள்ளான மக்கள் சீரற்ற முறையில் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட போதிலும், சிகிச்சையின் விளைவு (அல்லது இல்லாத விளைவு) “பார்வையாளர் சார்பினால்” சிதைந்து விட கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு சிகிச்சையின் திறன் குறித்த ஆராய்ச்சியாளரின் நம்பிக்கை சிகிச்சை விளைவின் மதிப்பீட்டை அவரையும் அறியாமல் சிதைக்கக் கூடிய சாத்தியத்தை இது குறிப்பிடுகிறது. பார்வையாளரை “குழு ஒதுக்கீட்டிற்கு மறைத்தல்” மூலம் விளைவுகளை மதிப்பிடும் நபர், ஒரு ஆய்வுக்குள்ளானவர் சிகிச்சை பெற்றாரா இல்லையா என்பதை அறியாமல் இருத்தலை உறுதி செய்வதே சிறந்த பாதுகாப்பாகும். நோயாளி மற்றும் தெரபிஸ்ட்களும் மறைக்கப்பட்டிருந்தால் அது பொதுவாக விரும்பத்தக்கதாகும். நோயாளிகள் மறைக்கப்பட்டிருந்தால், சிகிச்சை முறையின் வெளிப்படையான விளைவு போலியாகவோ அல்லது ஹாத்ரோன் விளைவுகளாலோ உண்டாகவில்லை என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம். தெரபிஸ்ட்களை அவர்கள் அளிக்கும் சிகிச்சைக்கு மறைத்தல் என்பது கடினம் அல்லது சாத்தியமற்றது, ஆனால் தெரபிஸ்ட்கள் சிகிச்சைக்கு மறைக்கப்படும் அத்தகைய சோதனைகளில், (ஒரு எடுத்துக் காட்டிற்கு, குறைந்த-ஆற்றல் லேசர் சோதனைகளில், லேசர் கருவி லேசர் அல்லது வண்ண நிற ஒளியை வெளியேற்றுகிறது, ஆனால் அது எது என்று தெரபிஸ்ட்டுக்கு தெரிவிக்கப்படவில்லை), சிகிச்சை முறையின் விளைவுகள் தெரபிஸ்ட்டின் சிகிச்சை ஆர்வத்தால் அல்லாமல், சிகிச்சையினால் மாத்திரமே ஏற்பட்டது என்று அறிந்து கொள்ளலாம்.

சோதனை நடந்து கொண்டிருக்கும் போது ஒரு சில ஆய்வு மக்கள் (“விலகியவர்கள் “) தங்கள் பங்கேற்பை தொடராமல் போவது என்பது மிக முக்கியம். ஏனெனில், விலகல்கள் ஆய்வு கண்டுபிடிப்புகளை தீவிரமாக சிதைக்க முடியும். கட்டுப்பாட்டு குழுவினரின் நிலை ஆய்வு காலத்தில் மோசமடைந்தது சிகிச்சை பெற ஆய்வை விட்டு சென்றால், கட்டுப்பாட்டு குழுவின் சராசரி விளைவு உண்மையில் இருப்பதை விட நன்றாக தெரியும் வகையில் ஒரு உண்மையான சிகிச்சை விளைவு ஏமாற்றலாம். மாற்றாக, சிகிச்சை, சில ஆய்வு மக்களின் நிலைமையை மோசமாக்கி, அதனால் அந்த மக்கள் ஆய்வை விட்டு விலகினால், சிகிச்சையானது உண்மையில் இருப்பதை விட, திறன் கொண்டதாக தெரியும். இந்த காரணத்திற்காக, விலகல்கள் ஒரு மருத்துவப் பரிசோதனையில் எப்போதும் அதன் செல்லுபடித் தன்மையில் ஒரு நிச்சயமற்ற நிலையை அறிமுகம் செய்யும். நிச்சயமாக, அதிகமான விலகல்கள், அதிக நிச்சயமற்ற நிலை- ஒரு தோராயமான விதி, 15% க்கும் அதிகமானவர்கள் ஒரு ஆய்விலிருந்து விலகினால், அந்த ஆய்வு சாத்தியமுள்ள தீவிரமான குறைபாடுகளை கொண்டுள்ளது. சில ஆசிரியர்கள் மிக சாதரணமாக, விலகல்கள் பற்றி பதிவிட மாட்டார்கள். அப்பாவி என்று நிரூபிக்கப்படும் வரை குற்றவாளி என்ற திட்டமிடப்பட்ட அறிவியல் கோட்பாட்டை முன்வைத்து, இவ்வகையான ஆய்வுகள் சாத்தியமுள்ள செல்லுபடி ஆகாதவைகள் என்று கருத வேண்டும்.

சுருக்கமாக, செல்லுபடியாகும் மருத்துவ சோதனைகள்:

  • ஆய்வுக்குள்ளான மக்களை சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு குழுக்களில் சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்பவை
  • குழு ஒதுக்கீடு மறைக்கப்பட்ட பார்வையாளர்கள், முடிந்தால் நோயாளிகள் மற்றும் தெரபிஸ்ட்களும்
  • வெகு சில விலகல்கள் கொண்டவை.

அடுத்த தடவை, நீங்கள் ஒரு பிசியோதெரபி சிகிச்சை மருத்துவப் பரிசோதனையை படிக்கும் போது, அச்சோதனை இந்த அம்சங்களைக் கொண்டுள்ளனவா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு பொது விதியாக, இந்த திட்ட அளவைகளை திருப்திப்படுத்தாத சோதனைகள் செல்லுபடி அற்றதாகவும், மற்றும் சிகிச்சை திறனிற்கு (அல்லது திறன் இல்லாமையின்) வலுவான ஆதாரமில்லாதவை எனவும் கருதப்பட வேண்டும். இந்த திட்ட அளவைகளை பூர்த்தி செய்த சோதனைகளை கவனமாக படித்தும் மற்றும் அவற்றின் முடிவுகளை நினைவில் வைக்க வேண்டும்!

நீங்கள் சோதனையின் செல்லுபடித் தன்மையை மதிப்பீடு செய்வது பற்றி மேலும் படிக்க விரும்பினால், முயற்சிக்கவும்:
Guyatt GH, Sackett DL, Cook DJ, et al. Users’ guide to the medical literature: II. How to use an article about therapy or prevention: A. Are the results of this study valid? JAMA 1993;270:2598-601.

3. சிகிச்சை மருத்துவரீதியாக பயன்மிக்கதாக இருக்கிறதா?

முந்தைய தனிமுறை பயிற்சி அளித்த ஒரு திட்ட அளவைகள் பட்டியலைக் கொண்டு, செல்லுபடியாகாத ஆய்வுகள் இடையே செல்லுபடியகுகிறவற்றை வேறுபடுத்தி பார்த்துக் கொள்ள வாசகர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். பெரும்பாலான செயல்முறையியல் வடிக்கலங்களை திருப்தி செய்யாத ஆய்வுகள், பொதுவாக சிறப்புடன் புறக்கணிக்கப்படலாம். இந்த பகுதி, பெரும்பாலான செயல்முறையியல் வடிக்கலங்களை திருப்தி செய்த ஆய்வுகளை எவ்வாறு தெரபிஸ்ட்கள் பொருள் விளக்கம் கொள்ள வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்கிறது. வெறுமனே ஒரு சிகிச்சையின் குறிப்பிடத்தக்க புள்ளியியல் விளைவின் ஆதாரத்தைப் பார்ப்பது போதுமானது அல்ல என்பதே செய்தியாகும். ஒரு சோதனையின் விளைவு அளவீடுகள் அர்த்தமுள்ளவையாகவும் மற்றும் சிகிச்சையின் நேர் திசையான விளைவுகள் சிகிச்சையை பயனுள்ளதாக செய்ய போதுமானதாய் இருக்க வேண்டுவதிலும் நீங்கள் திருப்திக் கொள்ள வேண்டும். சிகிச்சையின் தீய விளைவுகள் அடிக்கடி நடைபெறாமலும் மற்றும் சிறிதளவாகவும் இருந்து, சிகிச்சையானது தீயதை விட அதிகமாக நன்மையே செய்வதாக இருக்க வேண்டும். இறுதியாக, சிகிச்சை எடுபடக் கூடிய செலவு கொண்டதாக வேண்டும்.

நிச்சயமாக, ஒரு சோதனை பயனுள்ளதாக இருக்க வேண்டுமெனில், அது சிகிச்சையின் அர்த்தமுள்ள விளைவுகளை பற்றி விசாரிக்க வேண்டும். இதென்னவென்றால், விளைவுகள் ஒரு செல்லுபடியாகின்ற வழியிலே அளவிடப்பட வேண்டும் என்று அர்த்தம். பொதுவாக, ஒரு சிகிச்சையின் முதன்மை மதிப்பை, அது நோயாளிகளின் தேவைகளை பூர்த்திசெய்யுமா என்பதை வைத்து நாம் தீர்ப்பதால், சிகிச்சை விளைவின் அளவுக்கோல்கள் நோயாளிகளுக்கு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். ஆதலால், குறைந்த-ஆற்றல் லேசர் வலியைக் குறைக்கிறது என்று காட்டுகிற ஒரு சோதனையை விட செரோடொனின் அளவுகளைக் குறைக்கிறது என்று காட்டும் ஒரு சோதனை மிகவும் குறைவான பயனுள்ளதாக இருக்கிறது, மற்றும் இயக்க பயிற்சி தசை விறைப்புமையை குறைக்கிறது என்று காட்டுகிற ஒரு சோதனை, அது செயல்பாட்டு சுதந்திரத்தை மேம்படுத்துகிறது என்று காட்டுகிற ஒரு சோதனையை விட குறைவான பயனுள்ளதாக இருக்கிறது.

சிகிச்சை விளைவின் அளவு வெளிப்படையாக முக்கியம், ஆனால் அடிக்கடி கண்காணிக்கப்படாமல் உள்ளது. ஒருவேளை இது, மருத்துவ சோதனைகளின் பல வாசகர்கள் “புள்ளிவிவர முக்கியத்துவம்” மற்றும் “மருத்துவ முக்கியத்துவம்” இடையில் உள்ள வேறுபாட்டை பாராட்டாமல் போவதால் இருக்கலாம். இல்லை என்றால், மருத்துவ பரிசோதனைகளின் பல ஆசிரியர்கள் கொண்டுள்ள “p < 0.05” அல்லது இல்லை என்கிற சிந்தனையை பிரதிபலிக்கிறது. புள்ளிவிவர முக்கியத்துவம் (“p < 0.05”) என்பது சிகிச்சையின் விளைவு வெறும் வாய்ப்பினால் ஏற்பட்டதை விட பெரிதானது என்பதை குறிக்கிறது. இந்த விவரம் முக்கியம், (காணப்பட்ட சிகிச்சையின் விளைவுகள் வாய்ப்பினால் ஏற்பட்டவை அல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்) ஆனால், உண்மையில் அந்த விளைவின் அளவு எவ்வளவு பெரிதென்று நமக்கு அது எதுவும் சொல்வதில்லை. ஒரு சிகிச்சை விளைவின் அளவு பற்றிய சிறந்த மதிப்பீடு இரு குழுக்கள் இடையேயான சராசரி வேறுபாடு ஆகும். ஒரு அனுமான சோதனையில், இயக்க சிகிச்சை முறையின் விளைவு பற்றி அறிய, தோள்பட்டை வலியை 10 செ.மீ விசுவல் அனலாக் அளவுக்கோல் (VAS) கொண்டு அளவிடப்படுகிறது. சிகிச்சை குழுவில் சராசரியாக 4 செ.மீ. மற்றும் கட்டுப்பாட்டு குழுவில் சராசரியாக 1 செ.மீ. ஒரு சராசரி என்று குறைந்திருந்தது, அப்போது சராசரி சிகிச்சை விளைவின் அளவிற்கான சிறந்த மதிப்பீடு (4 செ.மீ. மைனஸ் 1 செமீ, 3 செமீ போல்) 3 செ.மீ. குறைப்பு ஆகும். மற்றுமொரு அனுமான சோதனையில், விளையாட்டி ற்கு முன்னான தசை நீட்டல், கட்டுப்பாட்டு குழுவில் காயமடைந்த 4% நோயாளிகளை ஒப்பிடும்போது, தசை நீட்டல் குழுவில் இருந்த 2% நோயாளிகள் காயமடைந்தனர் என்று தெரிவிக்கலாம். இந்த வழக்கில், தசை நீட்டல், காயமடைதலின் அபாயத்தை 2% (4%-ல் 2%-ஐ கழித்து 2% ஆகும்) குறைக்கும் என்பதே நமக்கு உள்ள சிறந்த ஆதாரம் ஆகும். மருத்துவ பரிசோதனைகளின் வாசகர்கள், அறிக்கையிடப்படுள்ள சிகிச்சை அளவை கண்டு, அது மருத்துவரீதியாக பயன் அளிப்பததற்கு போதுமான பெரிய அளவாய் உள்ளதா என்று முடிவு செய்ய வேண்டும் நோயாளிகள் பெரும்பாலும் குணமாகுவதற்காக சிகிச்சையை நாடி வருகின்றனர் (மருத்துவ நடைமுறையில் அனைத்து பகுதிகளிலும் இதை நிச்சயமாக பொதுமைப்படுத்த முடியாமல் இருக்கலாம்) என்பதை நினைவில் கொள்ளவும் – மிகவும் சிறிய விளைவுகள் கொண்ட சிகிச்சைகளில் பெரும்பாலானோருக்கு ஆர்வம் இல்லை.

ஒரு சிகிச்சை விளைவுகளின் அளவை பார்க்க ஒரு முக்கியமான நுட்ப நுணுக்கம் உள்ளது. அது, விளைவுகளை இரு கவட்டு முறை கொண்ட விளைவுகள் கொண்டு மதிப்பிடும் ஆய்வுகளுக்கு பொருந்தும், (இரு கவட்டு முறை விளைவுகள், இரண்டு மதிப்புகளில் ஒன்றைக் கொண்டிருக்கும், உயிருடன் உள்ளவர் அல்லது இறந்தவர், காயமடைந்தவர் அல்லது காயமடையாதவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அல்லது படாதவர், இவை யாவும் வலியை அளக்கும் விசுவல் அனலாக் அளவுக்கோல் (VAS) போன்றவற்றின் 0 உட்பட 10 வரை எந்த மதிப்பும் உள்ளவற்றில் இருந்து முரண்படும்). இரு கவட்டு விளைவுகளை அளக்கும் பல ஆய்வுகள், சிகிச்சையின் விளைவை வேறுபாடுகளின் அடிப்படையில் வித்தியாசங்களை விட, விகிதங்கள் அடிப்படையில் அறிக்கையிடும். (சில நேரங்களில், அவ்விகிதம் ஒரு “சார்பு அபாயம்” அல்லது “முரண்பாடுகள் விகிதம்” அல்லது “தீங்கு விகிதம்” என்றும் அழைக்கப்படும், ஆனால் இது போன்ற வேறு பெயர்களிலும் வருகிறது). இதன்படி, நமது தசை நீட்டல் அனுமான சோதனையின் முடிவுகளை காயமடைதலின் அபாயம் 50% குறைவானது (2% என்பது 4%-ல் பாதி என்பது போல) என்று வெளிப்படுத்தலாம். பொதுவாக, விகிதங்கள் வழியாக சிகிச்சை விளைவுகளை வெளிப்படுத்துவது சிகிச்சை விளைவு அளவுகள் அதிகமாக தோன்ற செய்வதற்காய் உள்ளது. இரண்டு குழுக்களுக்கும் இடையேயான வேறுபாடே சிறப்பான அளவீடாக உள்ளது. (உண்மையில், தலைகீழ் வேறுபாடே மிக சிறந்த அளவீடாக இருக்க முடியும். இது சில நேரங்களில், “சிகிச்சையளிப்பதற்கு தேவையான இலக்கம்” எனப்படும், ஏனெனில், ஒரு தீங்கு விளைவிக்கும் நிகழ்வை தடுக்க நாம் சராசரியாக எவ்வளவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை நமக்கு சொல்லும், தசை-நீட்டல் உதாரணத்தில், NNT = 1/0.02 = 50 ஆகும் அதனால், தசை நீட்டல் செய்த ஒவ்வொரு 50 ஆய்வு மக்களுக்கு, ஒரு காயம் தடுக்கப்படுகிறது).

பல ஆய்வுகள், சிகிச்சைகளின் தீய விளைவுகள் பற்றி தெரிவிப்பதில்லை (அதாவது, “பக்க விளைவுகள்” அல்லது சிகிச்சை “சிக்கல்கள்”). தீய விளைவுகள் பற்றிய அறிக்கைகள் இல்லாத காரணத்தினால், சிகிச்சை எந்த தீங்கும் கொண்டிருக்காது என்று அடிக்கடி பொருள் விளக்கம் கொள்ள வேண்டியுள்ளது, ஆனால் தெளிவாக அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை எனும் போது, துரதிருஷ்டவசமாகிறது. Glaziou மற்றும் Irwig (BMJ 1995;311:1356-9) ஆகியோர், மிக தீவிரமான நிலைமைகள் கொண்ட நோயாளிகளுக்கு, சிகிச்சை கொடுக்கப்படும் போது, பொதுவாக சிகிச்சை விளைவுகள் மிகவும் முதன்மையானதாக இருக்கும் என்று வாதிக்கின்றனர். (உதாரணமாக, குறைந்தளவு சளித் தேக்கம் கொண்ட ஒரு தலைக்-காய நோயாளியை விட மிகுதியான சளித் தேக்கம் கொண்ட ஒரு தலைக்-காய நோயாளிக்கு, மூச்சு குழாய் மூலம் உறுஞ்சுதல், சுவாச இயக்க நிறுத்த அபாயத்தை அதிகளவில் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது). மாறாக, சிகிச்சை அபாயங்கள் (இந்த நிலையில், உயர்த்தப்பட்ட உள்-மண்டை ஓடு அழுத்தத்தினால்) நிலையின் தீவிரத்தை பொருட்படுத்தாமல், சீரான நிலையியிலே இருக்கும். ஆதலால், தீவிர நிலைகள் கொண்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஒரு சிகிச்சை, தீமையை விட அதிகளவு நன்மை செய்யக் கூடும், மற்றும் தெரபிஸ்ட்கள், குறைவான தீவிர நிலை கொண்ட நோயாளிகளுக்கு, அபாயமான பக்க விளைவுகள் கொண்டிருக்கும் ஆற்றலுடைய ஒரு சிகிச்சையை அளிப்பதற்கு ஒப்பீட்டளவில் தயங்க வேண்டும்.

நடைமுறையில், மருத்துவ சோதனைகளில், தீய விளைவுகளை கண்டறிவது பெரும்பாலும் கடினம், ஏனென்றால் தீய விளைவுகள் அரிதாக தான் நிகழக் கூடியதாகும், மற்றும் பெரும்பாலான ஆய்வுகள், தீய விளைவுகள் நேரிடும் போது கண்டறிய, போதியளவு ஆய்வு மக்களை கொண்டிருப்பதில்லை. ஆதலால், ஒரு சிகிச்சைக்கான நல்ல சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் செய்யப்பட்ட பிறகும், அதிகப்படியான தீய நிகழ்வுகள் ஏற்படாது என்பதை உறுதிபடுத்திக் கொள்ள, சிகிச்சை பெற்ற நோயாளிகளின் பெருங்குழுக்களை பின்பற்றும் பெரிய அளவிலான “கண்காணிப்பு” ஆய்வுகள் ஒரு முக்கியமான பங்கு வக்கிகிறது. இது போன்ற ஆய்வுகள் செய்யப்படும் வரை, மருத்துவர்கள், குறிப்பாக சிகிச்சையிலிருந்து ஒப்பீட்டளவில் சிறியளவில் பயன் பெறும் நோயாளிகளுக்கு, தீங்கு விளைவிக்கக்கூடிய சிகிச்சைகளை அளிப்பது பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

விமர்சன மதிப்பீடுகளின் கூடுதலான நுட்பங்களில், மருத்துவ பரிசோதனைகள் மூலம் வழங்கப்படும் விளைவின் அளவு பற்றிய மதிப்பீடுகளின் துல்லியமற்ற தன்மையை கருத்தில் கொள்வதாகும். சில மக்கள் தொகையின் பிரதிநிதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற ஆய்வு மக்களின் மேல் சோதனைகள் செய்யப்படுகின்றன. இதென்னவென்றால், ஒரு சோதனை சிகிச்சை விளைவின் அளவை (நிறைவற்ற துல்லியமாக) வழங்க முடியும் என்று அர்த்தம். பெருமளவு ஆய்வு மக்களில் செய்யபடுகிற மருத்துவ சோதனைகள், சிறிய எண்ணிக்கையிலான ஆய்வு மக்களில் செய்யப்படுகிற சோதனைகளைக் காட்டிலும் சிகிச்சை விளைவுகளின் அளவுகளை சிறப்பான மதிப்பீடுகளாக (மிகவும் நுட்பமான) வழங்கும். வாசகர்கள், குறிப்பிட்ட ஒரு சோதனையை என்னவென்று தீர்மானிக்கும் போது, துல்லியமற்ற மதிப்பீட்டின் அளவை கருத்தில் கொள்ள வேண்டும், ஏனென்றால் அந்த குறிப்பிட்ட சோதனையிலிருந்து பெறப்படும் முடிவுகளின் உறுதி தன்மையை அது பெரும்பாலும் பாதிக்கும். ஒரு சோதனை அறிக்கையில் சிகிச்சை விளைவின் அளவு வெளிப்படையாக சொல்ல படாத போது, இதை செய்ய சிறந்த வழி, சிகிச்சை விளைவு அளவு மதிப்பீடுகளின் நம்பக இடைவெளிகளை கணக்கிடுவதாகும். விளைவின் அளவுக்கான அளவீடுகள் பற்றிய நம்பிக்கை இடைவெளிகளை கணக்கிடுவது மற்றும் விளக்குவது எப்படி என்பதற்கான ஒரு தனிமுறை பயிற்சி ல் கொடுக்கப்பட்டுள்ளது:

நம்பக இடைவெளிகளில் தன்னம்பிக்கை உடைய வாசகர்கள் (மன்னிக்கவும்), PEDro-வின் நம்பக இடைவெளி கணிப்பானை பதிவிறக்கம் செய்வதை உதவியாக காணலாம். கணிப்பான் எக்செல் விரித்தாள் வடிவில் உள்ளது.

ஒரு சிகிச்சை, எடுபடக் கூடிய செலவுடையதா என்பதை தீர்மானிப்பதே அதன் பயனை தீர்மானிக்கும் கடைசி பகுதியாக ஈடுபடுகிறது. குறிப்பாக இது, பொதுப் பணத்தின் மூலம் ஆரோக்கிய பராமரிப்பிற்காக செலவிடப்படும் போது அல்லது அளிக்கப்படும் போது முக்கியமாகின்றது. ஆரோக்கிய பராமரிப்பில் உள்ள அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் (ஒருவேளை, அனைத்து நல்ல கண்டுபிடிப்புகள் கூட) நிதியுதவி செய்ய போதிய ஆதாரங்கள் இருக்காது. இவ்வாறாக, ஒரு சிகிச்சைக்கான செலவு அதன் மேல் செலவு செய்யப்படும் பணமாக, பிற வகையான ஆரோக்கிய பராமரிப்பில் செலவு செய்ய முடியாததாக இருக்கிறது. டாலருக்கான விளைவு எங்கே பெரிதாக உள்ளதோ, அங்கே வரையறுக்கப்பட்ட நிதியுதவியின் அறிவுப்பூர்வமான பங்கீடு ஈடுபடுகிறது. நிச்சயமாக, ஒரு சிகிச்சை எடுபடக் கூடிய செலவுடையதாக இல்லையென்றால் அது பயனுள்ளதாக இருக்க முடியாது. ஆனால் பயனுள்ள சிகிச்சைகள் எடுபடக் கூடிய செலவுடையதாக இல்லாமல் இருக்க முடியும். எடுபடக் கூடிய செலவை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் முறைகள், இந்த ஆசிரியரின் நிபுணத்துவத்திற்கு புறம்பே உள்ளது. மற்றும் நான் இன்னும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களுக்கு ஒத்திவைப்பது அநேகமாக சிறப்பானதாகும். நீங்கள் ஆர்வமாக இருந்தால், நீங்கள் இவற்றை படிக்க விரும்பலாம்:

  • Drummond MF, Richardson WS, O’Brien BJ, Levine M, Heyland D. Users’ guide to the medical literature: XIII. How to use an article on economic analysis of clinical practice: A. Are the results of the study valid? JAMA 1997;277:1552-7.
  • O’Brien BJ, Heyland D, Richardson WS, Levine M, Drummond MF. User’s guide to the medical literature: XIII. How to use an article on economic analysis of clinical practice: B. What are the results and will they help me in caring for my patients? JAMA 1997;277:1802-6.

சுருக்கமாக, இந்த பிரிவு:

புள்ளிவிவர முக்கியத்துவம் மருத்துவ பயனை சமன் செய்யாது. ஒரு சிகிச்சை மருத்துவரீதியாக பயன்மிக்கதாக இருக்க வேண்டும் எனில்:

  • நோயாளிகள் ஆர்வம் கொண்ட விளைவுகள் மேல் தாக்கத்தை ஏற்படுத்தும்
  • பயனுள்ளதாக இருக்கும்படி பெரிய போதுமான விளைவுகளை கொண்டிருக்கும்
  • தீங்கை விட அதிக நன்மை செய்யும்
  • எடுபடக்கூடிய செலவு கொண்டதாக இருக்கும்.

நீங்கள் விளைவின் அளவை மதிப்பிடுவது பற்றி மேலும் படிக்க விரும்பினால், நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டியது:
Guyatt GH, Sackett DL, Cook DJ, et al. Users’ guide to the medical literature: II. How to use an article about therapy or prevention: B. What were the results and will they help me in caring for my patients? JAMA 1994;271:59-63.

புதிய செய்திகளை அறிந்து கொள்ள, PEDro செய்திமடலுக்கு பதிவு செய்யுங்கள்